மறைந்த நடிகை மனோரமாவால் புதிய சாதனை நிகழ்ந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர், ரசிகர்களால் ஆச்சி எனக் கொண்டாடப்பட்டவர் மனோரமா. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே நாடகங்கள் மூலம் அறிமுகமானவர் திரைத்துறையிலும் அசாத்திய நடிகையாக வளர்ந்தார். அம்மா, சகோதரி, குணச்சித்திரம், நகைச்சுவை என எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் திறம்பட நடித்து பாராட்டுகளைப் பெறக்கூடியவர் என்பதால் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து டிஜிட்டல் வரை 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை செய்தவர்.
இந்தச் சாதனை ஒருபுறம் என்றால், தற்போது ஆச்சரியப்படும் இன்னொரு சாதனைக்கும் சொந்தக்காரராக மாறிவிட்டார்.
அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாத அளவிற்குத் தமிழகத்தை ஆண்ட பல முதல்வர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ திரைத்துறையில் பங்களிப்பைச் செய்தவர்கள்தான்.
இதில், மறைந்த முதல்வர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகியோருடன் நாடகத்தில் நடித்த மனோரமா முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
முதல்வர் விஜய்யுடன் மனோரமா
மேலும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் நடித்த, ’ஒரே ரத்தம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் மனோரமா நடித்திருப்பார். யாரும் எதிர்பார்க்காத விதமாக 6 முதல்வர்களுடன் நடித்தவர் என்கிற சாதனையைச் செய்திருந்த மனோரமா, தற்போது, தமிழக முதல்வர் விஜய்யால் ஏழு முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை என்கிற சாதனையையும் பெற்றுள்ளார்.
விஜய்யுடன், ‘ரசிகன்’ உள்பட சில திரைப்படங்களில் மனோரமா நடித்துள்ளார். வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத அம்சம் மனோரமாவுக்கு கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது!
A new record has been set by the late actress Manorama.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
220 பேர் முயற்சியால் கடலுக்கடியில் தேசியக் கொடி! புதிய கின்னஸ் சாதனை

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!
விடியோக்கள்

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


