உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

முறையான வெளியீட்டுக்குத் தகுதியானவர்கள்! - கருப்பு படக்குழுவுக்கு தனுஷ் ஆதரவு!

கருப்பு படக்குழுவுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளது குறித்து...

News image

கருப்பு படக்குழுவுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் பதிவு... - கோப்புப் படம்

Updated On :42 நிமிடங்கள் முன்பு

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் வெளியீடு இன்று ரத்தான நிலையில், படக்குழுவுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள புதிய படம் “கருப்பு”. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையிலான நிதிப் பிரச்னையால் இன்று (மே 14) வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்றைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், இப்படத்தின் வெளியீட்டுக்கான மிகப் பெரிய தொகையைச் செலுத்த நடிகர் சூர்யா முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் “கருப்பு” திரைப்படம் முறையான திரையரங்க வெளியீட்டுக்குத் தகுதியானவர்கள் எனக் கூறி படக்குழுவுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் குரல் கொடுத்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“சூர்யா சார் மற்றும் கருப்பு திரைப்படம் முறையான திரையரங்க வெளியீட்டுக்குத் தகுதியானவர்கள். பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு “கருப்பு” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

With the release of actor Suriya's film "Karuppu" cancelled today, actor Dhanush has posted a message in support of the film crew.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.