எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

அனிருத் சம்பவம்... டிசி பின்னணி இசையைக் கொண்டாடும் ரசிகர்கள்!

அனிருத் பின்னணி இசை அதிகம் கேட்கப்பட்டு வருகிறது...

anirudh and lokesh kanagaraj

அனிருத், லோகேஷ் கனகராஜ்

Updated On :

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த பின்னணி இசை கவனம் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். மேலும், இந்தியாளவிலேயே அதிக சமபளம் பெறும் இசையமைப்பாளராக இருப்பதுடன் பல இசை தளங்களில் அதிகம் கேட்கப்படும் இசையமைப்பாளர் என பல அங்கீகாரங்களுடன் உள்ளார்.

கமர்சியல் திரைப்படங்களுக்கான பின்னணி இசையை வடிவமைப்பதில் அனிருத்தை அடித்துக்கொள்ளவே முடியாது என்கிற அளவிற்குக் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான பின்னணி இசைகளையும் உருவாக்கி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு விடியோ பின்னணி இசை, அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு இசை ஆகியவை லட்சகணக்கான முறை ரீல்ஸ் விடியோகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் டிரைலரில், “ரிவென்ஞ் ராகம் (Raga of revenge)” என்கிற பின்னணி இசையை அனிருத் பயன்படுத்தியுள்ளார். தற்போது, இந்த பின்னணி இசை வைரல் ஆகியுள்ளது. பலரும் டிரைலரை மீண்டும் மீண்டும் பார்க்கக் காரணம் அந்த இசைதான் கூறி வருகின்றனர்.

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் அந்த பின்னணி இசையை பல இசைத்தளங்களிலும் அனிருத் வெளியிட்டுள்ளார்.

Fans Celebrate the DC Background Score!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.