முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

என் பெயர் எங்கப்பா? கார்த்தியைக் கிண்டலடித்த சூர்யா!

சூர்யா பதில் குறித்து...

News image

சூர்யா, கார்த்தி

Updated On :17 மே 2026, 5:05 pm IST

நடிகர் சூர்யா நடிகர் கார்த்தியின் பதிவுக்குப் பதிலளித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இன்றுவரை ஹவுஸ்ஃபுல் நிலையே தொடர்ந்து வருகிறது.

இதனால், இப்படம் விரைவாக ரூ. 100 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் கழித்து சூர்யாவுக்கு வெற்றிப்படம் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி, சூர்யாவின் பெயரைக் குறிப்பிடாமல், ‘கருப்பா... இதுக்கு மேல என்ன வேண்டும்?” எனப் படத்தைப் பாராட்டியிருந்தார். ஆனால், அப்பதிவில் ஆர்ஜே பாலாஜி, சாய் அபயங்கர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது, அப்பதிவைப் பகிர்ந்த நடிகர் சூர்யா, “என் பெயர் எங்கப்பா?” எனக் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். மேலும், சூர்யாவின் கேள்விக்கு ஆர்ஜே பாலாஜி, “கருப்பான்னு யாரைச் சொல்லியிருக்கார் சார்?” என பதிலளித்துள்ளார். ரசிகர்கள் இப்பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

Actor Suriya has responded to Actor Karthi's post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.