2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!

சூர்யாவின் புதிய விடியோ வைரல்...

actor suriya

சூர்யா

Published On :

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இன்றுவரை டிக்கெட் கிடைக்காத நிலையே தொடர்ந்து வருகிறது.

நடிகர் சூர்யாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்திருப்பதால் அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்த நிலையில், நடிகர் சூர்யா விடியோ வெளியிட்டுள்ளார். அதில், “கண்ணுங்களா, செல்லங்களா, என் சாமிகளா... இந்த அன்புக்கு ரொம்ப நன்றி. மே. 14 ஆம் தேதி இக்கட்டான சூழ்நிலையால் கருப்பு வெளியாகவில்லை. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் நீங்கள் கொடுத்த நம்பிக்கையால், எல்லாமே மாறிவிட்டது. படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை உங்களால் கிடைத்த வரவேற்புக்கும் மரியாதைக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, திரையரங்கை மாற்றி வைத்திருக்கிற சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு, த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நன்றியைக் கூறுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

சூர்யாவின் இந்த விடியோ இன்ஸ்டாகிராமில் பெரிய கவனம் பெற்றுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Actor Suriya has expressed his gratitude for the success of the film Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.