நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் மூலம் தெரியவருகின்றன.
கங்குவா திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூலித்தது. இருப்பினும் கங்குவா சுமாரான விமர்சனத்தினால் இந்தப் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் நேற்று (மே.15) வெளியானது. இந்தப் படம் மே.14ஆம் தேதி வெளியாக இருந்தது, தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் பிரச்னையினால் தாமதமானது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.14.40 கோடியும் வெளிநாட்டில் ரூ 4 கோடியும் வசூலித்துள்ளது. இரவுக் காட்சிக்கு 75.15 சதவிகித டிக்கெட்டுகள் பதிவாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, புக்மை ஷோ செயலியில் 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், வசூல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ONE MILLION already for THE ONE ð¥#Karuppu #VeeraBhadrudu sells one million tickets and counting, on BookMyShow. Absolute rampage!
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 16, 2026
A @SaiAbhyankkar Musical ðµ#KaruppuBlockbuster @Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika⦠pic.twitter.com/2sghndj6I7
Summary
Karuppu Box Office Collection Day 1: Suriya-Trisha Krishnan's Film 1 Million Tickets Sold
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










