ஹாரர் - திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள புதிய படத்தில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன், 2019இல் தெலுங்கில் ’மீக்கு மாத்திரமே செப்தா’ எனும் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழில் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து இவர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்த்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான ‘செங்களம்’ இணையத் தொடரும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இதனிடையே, பரணி சேகரன் இயக்கத்தில் தாழ் திறவா என்ற படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷியாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை, உதகை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொல்பொருள் ஆராய்ச்சியின்போது, பழங்கால நாகரிகத்தை கண்டுபிடிக்கப்படுகிறது, அந்தக் கண்டுபிடிப்பால் பிரச்சினைகளை ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி ஹாரர் - திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாழ் திறவா படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary
Actress Vani Bhojan stars in a new film made in the horror-thriller genre.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?

தஸ்ஸாடியா பாடல்!

ஓடிடியில் மிரள வைக்கும் திரில்லர் திரைப்படம்: எதில் பார்க்கலாம்?
விடியோக்கள்

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி

எடப்பாடி பழனிசாமியின் கண் அசைவில் ஆட்சி அமைந்திருக்கும்! - CV Shanmugam பரபரப்பு பேட்டி | ADMK | EPS




