நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

கருப்பு - 2 உருவாகும்: ஆர்ஜே பாலாஜி

கருப்பு - 2 குறித்து....

News image

ஆர்ஜே பாலாஜி, சூர்யா

Updated On :24 மே 2026, 5:09 pm IST

கருப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக கருப்பு மாறியுள்ளது. இதுவரை ரூ. 230 கோடி வரை வசூலித்த இப்படம் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியாகி 10-வது நாளிலும் 900 திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல் நாளைவிட அதிகம்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்ஜே பாலாஜி, “3 ஆண்டுகளுக்கு முன் சூர்யா சாரிடமிருந்து அழைப்பு வந்தபோது வேறு வேலையாக இருந்தேன். பின், சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர் அழைத்தார். இது மறைமுக செய்தி என எடுத்துக்கொண்டு கருப்பு கதையை அவரிடம் சொன்னேன்.

எனக்கு கடவுள் மீது ஆணித்தரமான நம்பிக்கை உண்டு. கருப்பு திரைப்படம் மக்களுக்குப் பிடிக்கும் கொண்டாடுவார்கள் என நம்பினேன். அதேபோல் நடந்துவிட்டது. இப்படத்திற்கான இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது. எழுதும்போதுதான் அது எப்படி வரும் எனத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

Director RJ Balaji has announced that a sequel to the film Karuppu will be produced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.