சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ரிதம்: அர்ஜுன்

நடிகர் அர்ஜுனின் ரிதம் குறித்து...

News image

ரிதம் - அர்ஜுன், மீனா - Dinamani

Updated On :27 மே 2026, 5:46 pm IST

நடிகர் அர்ஜுன் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ரிதம் எனக் கூறியுள்ளார்.

நடிகர் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ப்ளாஸ்ட் திரைப்படம் நாளை (மே. 28) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதிரடி ஆக்சன் படமாக உருவான இதன் டிரைலர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர் அர்ஜுன் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அப்படியான சந்திப்பில் பேசிய அர்ஜுன், “நான் நடித்த திரைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ரிதம். அப்படத்தை எப்போது டிவியில் போட்டாலும் அமர்ந்து பார்ப்பேன்.

நான் இயக்கிய படங்களைக்கூட அப்படி பார்த்தது கிடையாது. ரிதம் கதையில் இருந்த மென்மையே இதற்குக் காரணம். கார்த்திகேயனுக்கு (அர்ஜுன்) இன்னும் நல்லது நடத்திருக்கலாம் என்கிற கதாபாத்திரம், மீனா மற்றும் ஜோதிகாவின் எதார்த்தமான நடிப்பு, இயக்குநர் வசந்த்தின் பிரமாதமான இயக்கம் என எல்லா வகையிலும் நம் மனதைத் தொடும் நல்ல படம்” எனக் கூறியுள்ளார்.

Actor Arjun has stated that his favorite film is Rhythm.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.