வில் அம்பு திரைப்படத்தின் இயக்குநர் புற்றுநோயால் காலமானார்.
நடிகர்கள் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வில் அம்பு திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. அப்படத்திற்குப் பின்பே ஸ்ரீ, ஹரிஷ் கல்யாணுக்கும் நல்ல பெயர் கிடைக்க, வணிக ரீதியாகவும் தங்களை வளர்த்துக்கொண்டனர்.
இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் வழங்க, இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியிருந்தார். வெற்றிப்படமானாலும் அடுத்த படத்தை ரமேஷ் இயக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், சில மாதங்களாக எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இவரது மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
director of the film Vil Ambu passed away due to cancer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










