காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

சுயலாபத்திற்கான சந்தர்ப்பவாதம்... துருவ் ரதீயை விளாசிய சந்தீப் ரெட்டி வங்கா!

சந்தீப் ரெட்டி வங்காவின் பதிவு வைரலாகி வருகிறது...

யூடியூபர் துருவ் ரதீ, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா

Updated On :

சமூகக் குற்றங்களுக்குத் திரைப்படங்கள் காரணமா என சந்தீப் ரெட்டி வங்கா சாடியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பள்ளி மாணவியை ரம்ப ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நாட்டையே நடுங்க வைத்தது. இச்சம்பவத்தால் படுகாயமடைந்த மாணவி பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலை நிகழ்த்திய குற்றவாளியைக் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்தைக் கூறினர். முக்கியமாக, யூடியூபர் துருவ் ரதீ, “அனிமல், துரந்தர் போன்ற திரைப்படங்களால்தான் இப்படியான வன்முறைகள் நிகழ்கின்றன” எனப் பதிவிட்டார். இதனை ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துகள் பரவின.

இந்த நிலையில், அனிமல் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், ”ஒருவர் கொடூரமான குற்றத்தைச் செய்யும் போது, முதலில் வெளிப்பட வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் மீதான அனுதாபமும் அந்தக் குற்றத்துக்குப் பின்னால் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியும்தான். மாறாக, சினிமாவை பலிகடாவாக மாற்றக் கூடாது.

இந்தக் கொடூரமான துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ உங்களின் அக்கறை காட்டாமல் தனிப்பட்ட வன்மங்களைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதில் விரக்தியடைந்த, தோல்வியடைந்த, வேலையில்லாத நடிகர், நடிகைகள் சிலரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சிலரும் அடங்குவர். மற்றவர்களின் படைப்புகளைக் குறை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும்; உடனே தங்களைச் சமூக சீர்திருத்தவாதிகளாக முன்னிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களைக் குறிப்பிட்டே இதைச் சொல்கிறேன்.

ஒரு துயரச் சம்பவத்துக்குத் தேவைப்படுவது அனுதாபமும் ஆறுதலும்தான். அதைச் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதம் அல்ல. இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ளுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

Sandeep Reddy Vanga has lashed out at the suggestion that films are responsible for social crimes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.