மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலையும் சரிவு! (நவ. 6)

த்ரிஷா அணிந்திருந்த முத்து-கைவேலைப்பாடுடைய இளஞ்சிவப்பு சேலை! விலை வெறும்...

த்ரிஷா அணிந்திருந்த முத்து-கைவேலைப்பாடுடைய இளஞ்சிவப்பு சேலையின் விலை பற்றி...

திருமண விழாவில்

திருமண விழாவில்

Updated On :

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடன் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார்.

சென்னையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களில் தமிழக முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா மற்றும் முதல்வரின் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்ததுதான் நேற்று வைரலான செய்தியாக மாறியது.

இதுகுறித்த விடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நடிகை த்ரிஷா அணிந்திருந்த சேலை மற்றும் அதற்கு ஏற்ற ரவிக்கையும் ஏராளமானோரால் வலைத்தளங்களில் தேடப்பட்டு வந்தது.

இளஞ்சிவப்பு நிற சேலையில் நடிகை த்ரிஷா வந்திருந்தார். பலரது பார்வையும் மணப்பெண்ணையும் தாண்டி த்ரிஷா மீதுதான் குவிந்தது.

காரணம், அந்த நிறம் மற்றும் அதன் கைவேலைப்பாடுதான். பவுடர்-பிங்க் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில், முத்துகள், மணிகள், கற்கள் பதித்து கைவேலைப்பாடுடன் தயாரிக்கப்பட்டிருந்த இந்த சேலையின் விலை குறைந்தது ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என்று இதுபோன்ற சேலைகளை வலைத்தளங்களில் தேடியபோது கண்ணில் பட்டது.

இந்த புடவையே அழுத்தமான வேலைப்பாடு கொண்டதாக இருக்கும் நிலையில் அதற்கு மிகப் பொருத்தமான கழுத்து நெக்லஸ் அணிந்திருந்தார். சேலையின் நிறத்துக்கு பொருத்தமாக மேக்அப் செய்திருந்ததையும் பலரும் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள்.

தலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த அழுத்தமான அலங்காரத்தை எளிதாக்கும் வகையில் தலைமுடியை விரித்துவிட்டபடி வந்திருந்தார். பலரும் நேற்று மணப்பெண்ணை விடவும் த்ரிஷாவைத்தான் அதிகம் கவனித்திருப்பார்கள் என்றே கூறலாம்.

Summary

The pink, pearl-embellished saree worn by Trisha! Priced at just...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER