பொங்கல் வெளியீடாக டிமான்டி காலனி - 3! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

டிமான்டி காலனி - 3 படத்தின் வெளியீடு குறித்து, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி - 3 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, 3 ஆம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜானோ காலித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்தப் படம் செப். 11 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இப்படத்தின் இணை தயாரிப்பாளர் விஜயா சுப்பிரமணியன் (வொயிட் நைட் எண்டர்டெயின்மென்ட்) தன் கவனத்திற்கு வராமலேயே இப்படத்தின் ஓடிடி உரிமத்தைக் கொடுத்ததாகவும் தங்களுக்குத் தெரியாமலே படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிமான்டி காலனி - 3 திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்.
பின்னர், வழக்கு விசாரணை நிறைவு பெற்று, டிமான்டி காலனி - 3 திரைப்படத்தின் மீதான இடைக்காலத் தடை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், டிமான்டி காலனி - 3 திரைப்படம் 2027 பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


