ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

டிமான்டி காலனி - 3 மீதான தடையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

டிமான்டி காலனி - 3 மீதான இடைக்காலத் தடை ரத்தானது....

டிமான்ட்டி காலனி - 3 போஸ்டர்

Published On :

டிமான்டி காலனி - 3 திரைப்படத்தின் மீதான இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி - 3 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் செப். 11 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், இப்படத்தின் இணை தயாரிப்பாளர் விஜயா சுப்பிரமணியன் (வொயிட் நைட் எண்டர்டெயின்மென்ட்) தன் கவனத்திற்கு வராமலேயே இப்படத்தின் ஓடிடி உரிமத்தைக் கொடுத்ததாகவும் தங்களுக்குத் தெரியாமலே படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிமான்டி காலனி - 3 திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றார்.

இதன் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டிமான்டி காலனி - 3 திரைப்படத்தின் மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், இப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Madras High Court has lifted the interim stay on the movie Demonte Colony 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.