மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

திருநங்கைகளின் கதையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லையா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

கார்த்திக் சுப்புராஜ் பேச்சு...

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சனந்த்.

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டோரதி திரைப்படத்தின் மீதான விமர்சனத்திற்குப் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் உருவான டோரதி திரைப்படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பாலின அடையாளங்களையும் அதனைச் சமூகம் எதிர்கொள்ளும் விதத்தையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இப்படத்தினால் ஏற்பட்ட விவாதங்களால் பல திரைகளிலும் டிக்கெட்கள் விற்பனை அதிகரித்துள்ளன. இதுவரை ரூ. 6 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், திரையரங்கத்திற்குச் சென்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம், “எக்ஸ் தளத்தில் டோரதியைக் கடுமையாகத் தாக்கி எழுதி வருகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.

இதற்கு கார்த்திக் சுப்புராஜ், “எக்ஸ் தளம் என்பது சின்ன உலகம். அதில் விமர்சிப்பவர்கள் இன்னும் சிறிய உலகத்தினர். பாராட்டுபவர்களின் கருத்துகளையும் கேளுங்கள். விமர்சிப்பவர்கள் டோரதி திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். இதனால், புதிய விவாதம் தொடங்கியிருப்பதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். திருநங்கைகளின் கதையைத் திரைப்படமாகா எடுத்தால் அதைத் தாங்கிக்கொள்ளவும் பார்க்கவும் முடியவில்லை என்றால் அது யாருடைய பிரச்னை? இதனை ஒரு உரையாடலாக மாற்ற முன்வாருங்கள். அதைவிட்டுட்டு அவர்கள் ஒன்னு சொல்ல, நான் ஒன்னு சொல்ல என்றால் அது நிற்காது” எனத் தெரிவித்துள்ளார்.

Director Karthik Subbaraj has responded to the criticism regarding the film Dorothy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER