மிகப்பெரிய வெற்றி... ஏஒடி படத்தைப் பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஏஒடி படத்தைப் பற்றி இயக்குநர் ராஜமௌலி கூறியிருப்பதாவது...

ஏஒடி படத்தின் போஸ்டர், இயக்குநர் ராஜமௌலி - படம்: எக்ஸ் / கீதா ஆர்ட்ஸ், ராஜமௌலி.
இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்தைனை இயக்குநர் ராஜமௌலி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
தமிழில் இந்தப் படத்தினை ஏஒடி என்று படக்குழு வெளியிட்டுள்ளது. பான் இந்திய படமான வெளியாகிய இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஸ்வப்னா சினிமா, லைட்பாக்ஸ் மீடியா, கீதா ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு குன்னம் கங்கராஜு, வசந்த் ஜுர்ரு திரைக்கதை எழுத இயக்குநர் பவன் சதினேனி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சாத்விகா வீரவள்ளி, ஷ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இன்று வெளியாகிய இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கனவு காண்பது ஒரு பரிசு. அதை நனவாக்க ஒருவருக்கு மன உறுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். ஏஓடி படக்குழுவுக்கு இரண்டுமே இருக்கிறது. படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஆகாசம்லோ ஒக தாரா மிகப்பெரிய வெற்றி எனக் கூறியுள்ளார்.
To dream is a gift.â°To realise it, one needs grit and resolve.â°Team #AOT had them bothâ¦â°With superb performances from the entire cast, #AakasamLoOkaTara is a triumphâ¦ðð»
— rajamouli ss (@ssrajamouli) November 20, 2026
An incredible feeling to have our dream appreciated by @ssrajamouli garu â¤ï¸ð¤
— Geetha Arts (@GeethaArts) November 20, 2026
Thanking him for his love and encouragement for #AakasamloOkaTara...â¨ï¸
Grab your tickets ðhttps://t.co/b2O6ZR4beR#AOT Grand Release Today with Blockbuster Talk from Paid Premieres!#AOTonNOV20th⦠pic.twitter.com/JogmFomY1J
Summary
Aakasamlo Oka Tara opens to positive reviews; SS Rajamouli calls Dulquer Salmaan film 'a triumph'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

