ஏஒடி வெற்றி... அறிமுக நாயகி சாத்விகா வீரவள்ளிக்கு இரு படங்கள் ஒப்பந்தம்!
அறிமுக நாயகி சாத்விகா வீரவள்ளிக்கு இரண்டு படங்கள் ஒப்பந்தமாகி இருப்பது குறித்து...

சாத்விகா வீரவள்ளி - படம்: எக்ஸ் /
அறிமுக நாயகி சாத்விகா வீரவள்ளிக்கு இரண்டு படங்கள் ஒப்பந்தமாகி இருப்பதாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.
இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) என்ற படத்தில் நடிகை சாத்விகா வீரவள்ளி நாயகியாக அறிமுகாமியுள்ளார்.
இந்தப் படத்தில் ஷ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியும் இந்தப் படத்தைப் பாராட்டி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறியிருப்பதாவது:
தொடக்கத்தில் ஏஒடி திரைப்படத்துக்கு நட்சத்திர நடிகையை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யவிருந்தோம். பின்னர், ஆடிஷனில் சாத்விகாவின் நடிப்பைப் பார்த்து முடிவை மாற்றினோம். அவரது நடிப்பு அற்புதமாக இருந்தது. ஏஒடி படத்தைப் பார்த்த பிறகு புதிய இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
சாத்விகா வருங்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக மாறுவார் என நம்புகிறேன். அதனால், அவரை மேலும் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன்.
அடுத்ததாக சாத்விகா வீரவள்ளி நாக சைதன்யாவுடன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சாத்விகாவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
à°®à±à°®à± నాఠà°à±à°¤à°¨à±à°¯à°¤à± à°à±à°¸à± à°¨à±à°à±à°¸à±à°à± సినిమాలౠSatvika Veeravalli à°¹à±à°°à±à°¯à°¿à°¨à±. మరౠసినిమాలౠà°à±à°¡à°¾ à°à°®à±à°¨à± à°¤à±à°¸à±à°à±à°à°à±à°¨à±à°¨à°¾à°.
— idlebrain.com (@idlebraindotcom) November 20, 2026
- Allu Aravind#AakasamloOkaTara pic.twitter.com/MPZTGpZBD6
Summary
Allu Aravind signs two films with Satvika Veeravalli after AOT success
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


