அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் சாம் சிஎஸ்!
100 படங்களைக் கடந்து இசையமைத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் குறித்து...

சாம் சிஎஸ் - கோப்புப்படம்
தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பின்னணி இசையாலும், வித்தியாசமான இசைக்கோர்வைகளாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.
ஒவ்வொரு படத்திற்கும் கதையின் தன்மைக்கு ஏற்ப புதிய இசை அனுபவத்தை வழங்கி வரும் அவர், தற்போது அடுத்தடுத்து பல மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில், சாம் சிஎஸ் இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் வெளியான ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தில் இவரின் இசை, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தெலுங்கில் ராம் பொதினேனி இயக்கி நடிக்கும் RAPO23 திரைப்படத்துக்கும் இசையமைக்கிறார். கிருஷ்ணா பொதினேனி தயாரிக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை திருநாவுக்கரசு கவனிக்கிறார்.
ராம் பொதினேனியின் இயக்குநர் அறிமுகப் படத்தில் சாம் சிஎஸ் இணைந்திருப்பது இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சாம் சி எஸ் இசையமைப்பில் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படமும் அடுத்ததாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘டிமான்டி காலனி 2’ படத்தின் பின்னணி இசை மூலம் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சிஎஸ், மூன்றாம் பாகத்திலும் தொடர்வது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் பொங்கல் 2027 வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
‘கராத்தே பாபு’, உள்ளிட்ட பல படங்களில் சாம் சிஎஸ் தனது இசைப் பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மூலம் தனது 100-வது பட மைல்கல்லையும் அவர் கடந்துள்ளார். மேலும், புஷ்கர் – காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் உள்ளிட்ட எதிர்பார்ப்புக்குரிய படங்களுடனும் அவரது பெயர் இணைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் எனப் பல்வேறு தளங்களிலும் தனது இசைப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார் சாம் சிஎஸ்.
‘கைதி’, ‘வணங்கான்’ உள்ளிட்ட படங்களில் பின்னணி இசை மூலம் கதையின் உணர்வுகளையும் தீவிரத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர், காதல் மெலோடிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
ஒரு இசையமைப்பாளராக 100 படங்களைக் கடந்தது மட்டுமின்றி, ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதிலும் சாம் சி எஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, பின்னணி இசையில் அவர் உருவாக்கும் தனித்துவமான சவுண்ட் டிசைனும், கதைக்கேற்ற இசை மொழியும் அவருக்கான தனி அடையாளமாக மாறியுள்ளன.
சமீபத்தில் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த கன்னடத் திரைப்படமான ‘மஹாவதார் நரசிம்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
In the Tamil film industry, music composer Sam C.S. has built a dedicated fan base for himself through his unique background scores and distinctive musical arrangements.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


