இந்தியாவில் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே புதிய சாதனை!

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே டிக்கெட் முன்பதிவுகள் குறித்து....

Updated On :

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் இந்தியாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் ஆகிய படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் இயக்கத்தில் உருவான மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புதிய படம் ’அவெஞ்சர்ஸ் - டூம்ஸ்டே’.

அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் இப்படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்பதிவிலேயே இப்படம் இந்திய மதிப்பில் உலக அளவில் ரூ. 1,000 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது. இந்தாண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்று என்பதால் இப்படத்திற்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், டிச. 17 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் வாயிலாக ரூ. 48 கோடி வணிகம் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் வெளியீட்டிற்கு 25 நாள்கள் இருக்கும் போது இப்போதே இந்த அபாரமான வசூல் சாதனையைச் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

The film 'Avengers: Doomsday' has set a new record in India for ticket pre-sales.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.