உங்களைப் போல் வாழ வேண்டும்... ரோபோ சங்கர் மகள் உருக்கம்!
ரோபோ சங்கர் மகள் பகிர்ந்த புகைப்படங்கள்...

ரோபோ சங்கர் தன் மனைவியுடன்
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் 25வது திருமண நாளில் அவரது மகள் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின், நீண்ட இடைவெளிக்குப் பின் ’மாரி’ படத்தின் மூலம் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வாயை மூடி பேசவும், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் பேசப்படும் நடிப்பை வழங்கினார். தொடர்ந்து, 2025-ல் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அண்மையில், நடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிப்படங்களில் ஒன்றான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் உதவியாளராக நகைச்சுவை ரௌடி கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்த காட்சிகள் மீம்ஸ்களாக மாறி அவரை வைரலாக்கின.
இந்த நிலையில், மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் 25-வது திருமண நாளை முன்னிட்டு சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 25 ஆவது திருமண நாள் வாழ்த்துகள். இந்த ஆண்டைப் பெரிதாகக் கொண்டாட காத்திருந்தோம். நான் பார்த்து வளர்ந்ததில் நீங்கள்தான் புரிதல்மிக்க சிறந்த தம்பதி. வாழ்ந்தால் உங்களைப் போல் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். அப்பா, ஒவ்வொரு நாளும் அம்மா உங்கள் நினைவுகளிலேயே இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
The daughter of actor Robo Shankar has shared photographs on the occasion of his 25th wedding anniversary.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


