இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

இப்படி பண்றீங்களேப்பா... ரச்சிதாவின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்!

ரச்சிதாவின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்....

நடிகை ரச்சிதா ராம்

Published On :

நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கன்னட திரைத்துறையைச் சேர்ந்தவரான ரச்சிதா ராம் ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பின் 2013 ஆம் ஆண்டு வெளியான புல்புல் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை வென்றார்.

20 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கன்னட ரசிகர்களிடம் கவனம் பெற்றவர், ஐ லவ் யூ படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பாளர்களை வைத்திருக்கும் கன்னட நடிகைகளில் ஒருவர்.

தமிழில் கூலி திரைப்படத்தில் கல்யாணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தற்போது, ரச்சிதாவின் நடிப்பில் 3 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த நிலையில், ரச்சிதா ராமின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அவரது ரசிகர் மன்றத்தினர் நள்ளிரவில் சந்திப்பை நிகழ்த்தினர். இதில் கலந்துகொண்ட ரச்சிதா கேக் வெட்டி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். மேலும், அவருடன் இணைந்து ரசிகர்கள் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

அப்போது ரசிகர் ஒருவர் ரச்சிதாவுடன் புகைப்படம் எடுத்தவுடன் திரும்பி அவரின் கன்னத்தைக் கிள்ளினார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ரச்சிதா ஒரு கணம் பதற்றமாகி பின் புன்னகைத்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர் கொஞ்சம் அத்துமீறினாலும் பலரும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘நந்தினி’ தொடரின் நாயகி நித்யா ராம் இவரின் உடன்பிறந்த சகோதிரி என்பது குறிப்பிடத்தக்கது.

A video of a fan pinching actress Rachita Ram's cheek has gone viral on social media.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER