மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகம் இயக்க ஆசை: அட்லீ

இயக்குநர் அட்லீ மருதநாயகன் திரைப்படம் குறித்து பேச்சு...

நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் அட்லீ

Published On :

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மருதநாயகன் திரைப்படத்தை இயக்க விருப்பமுள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிட்டுள்ளனர். உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருவதால் அவதார் போன்று மிகச்சிறப்பான காட்சியனுபவங்களக ராக்கா எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

அண்மையில், இயக்குநர் அட்லீயிடம் ராக்கா திரைப்படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அட்லீ, “என் தயாரிப்பாளர் கூட இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. விரைவில், ராக்கா திரையரங்குகளுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார். இப்படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பத்தா வெற்றி விழாவில் பேசிய அட்லீ, “நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கமல் சார் நடிப்பில் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். என்னிடம் அதற்கான சின்ன கதைக்கருவும் இருக்கிறது. வாய்ப்பும் பட்ஜெட்டும் அமைந்தால் நடிகர் கமல் ஹாசனையும் விஜய் சேதுபதியையும் அப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Atlee has expressed his desire to direct the movie Marudhanayagam with actor Vijay Sethupathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.