பார்வதி நடித்த பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் ஓடிடி தேதி!

பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் ஓடிடி வெளியீடு குறித்து....

Published On :

நடிகை பார்வதி திருவோத்து நடிப்பில் வெளியான பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

இயக்குநர் ஷகத் இயக்கத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மாத்யூ தாமஸ், உன்னி மாயா உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்.

காவல் நிலையத்தில் காவல்துறையினரால் நடக்கும் அதிகார அத்துமீறல்கள் குறித்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் நல்ல கருத்துகளைப் பெற்றது. காவல் அதிகாரியாக நடிகை பார்வதியின் கதாபாத்திரமும் நன்றாக எழுதப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறியிருந்தனர்.

Story image

இப்படம் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதையை பி. எஸ். சுப்ரமணியம், விஜேஷ் தொட்டிங்கல் ஆகியோர் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற அக். 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

actor parvathi's Pradhama Drishtya Kuttakkar ott date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.