த்ரிஷ்யம் பாணி... ஓடிடியில் விமர்சனங்களைச் சந்திக்கும் பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்!
பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் ஓடிடி வெளியீடு குறித்து...

நடிகை பார்வதி திருவோத்து நடித்த பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இயக்குநர் ஷகத் இயக்கத்தில் நடிகர்கள் பார்வதி திருவோத்து, சித்தார்த் பரதன், மாத்யூ தாமஸ், உன்னி மாயா உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் நல்ல கருத்துகளைப் பெற்றது. மேலும், திரையரங்க வெளியீட்டில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், ஓடிடியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. முக்கியமாக, இப்படம் த்ரிஷ்யம் பாணியில் அதே போன்று திருப்புமுனைகள் கொண்ட திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரசிகர்களை ஏமாற்றுவதற்காகவே சில லாஜிக்குகள் மீறப்பட்டுள்ளன என்றும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
ஓடிடி விமர்சனங்களுக்குப் பதிலளித்த இயக்குநர் ஷகத், “ஓடிடி தளத்தில் இப்படம் வெளியான பின்பு பார்வையாளர்களிடமிருந்து இத்தகைய எதிர்வினை வரும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தேன். ஒரு இயக்குநராக, நான் சில ஆக்கப்பூர்வமான சுதந்திரங்களைச் செய்தேன் என்பது உண்மைதான். இப்படம் ஒரு ஆவணப்படமோ அல்லது முழுமையாக நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதோ அல்ல. இது இன்னும் சுவாரஸ்யமாக அமைவதற்காகவே நாங்கள் அத்தகைய சுதந்திரங்களைப் பயன்படுத்திக்கொண்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
The film Pradhama Drishtiya Kuttakkar, starring actress Parvathi Thiruvothu, is facing criticism following its OTT release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


