பெரிய மனநிறைவு... டோரதியைப் பாராட்டிய மாரி செல்வராஜ்!
டோரதி திரைப்படத்தைப் பாராட்டிய மாரி செல்வராஜ்...

இயக்குநர் மாரி செல்வராஜ் டோரதி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான டோரதி திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது. சில மாறுபட்ட கருத்துகள் கிடைத்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜும் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். இதில், “இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியப்படுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்.." எனத் தெரிவித்துள்ளார்.
Director Mari Selvaraj has praised the film Dorothy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


