பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

‘ஜெயிலா் 2’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை

நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜெயிலா் 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை

Published On :

நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜெயிலா் 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் அக். 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும், திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 30 நிமிஷங்களில் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்படுவதால், பெருத்த இழப்பு ஏற்படுகிறது.

எனவே, ‘ஜெயிலா் 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஜெயிலா் 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.