சென்னையில் தரவு மையம் திறப்பு! முதல்வர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் பங்கேற்பு!தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மீண்டும் இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் - இளையராஜா கூட்டணியில் புதிய இணையத் தொடர்...

இசையமைப்பாளர் இளையராஜா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் மீண்டும் இணையவுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற டோரதி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் பெரிய ஹிட் அடித்தன. இரண்டு பாடல்களும் படத்திற்கு உறுதுணையாக இருந்தது.

மேலும், பின்னணி இசைகளும் காட்சிகளுக்குக் கூடுதல் பலத்தை அளித்திருந்தன. குறிப்பாக, இளையராஜாவின் ஹவ் டு நேம் இட் (How to name it) ஆல்பத்தில் இடம்பெற்ற டு எனிதிங் (Do anything) இசையை டோரதி கிளைமேக்ஸில் பயன்படுத்தி கைதட்டல்களையும் பெற்றனர்.

இந்த நிலையில், தான் அடுத்ததாக நடிகர்கள் அதர்வா, பிரபுதேவாவை வைத்து இயக்கிவரும் இணையத் தொடருக்கு இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பணியாற்ற உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். டோரதி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணையவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Director Karthik Subbaraj is set to collaborate with music composer Ilaiyaraaja once again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER