முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

தெய்வீக மர்மம் கதைக்களத்தில் உருவாகும் ஆதி ருத்ரா!

தெய்வீக மர்மம் கதைக்களத்தில் உருவாகும் ஆதி ருத்ரா திரைப்படம் பற்றி...

Aadi Rudra

ஆதி ருத்ரா போஸ்டர் - X

Updated On :

தெய்வீக மர்மத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள ஆதி ருத்ரா திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகவுள்ளது.

ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் நவரசன் இயக்குகிறார். காந்தாரா, விருபாக்ஷா, மங்களவாரம், மகாராஜா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் தெய்வீக மர்மங்களையும், ஆன்மிகம் மற்றும் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Summary

Adi Rudra, a divine mystery unfolding in the storyline!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.