மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஆபரேஷன் கங்கா படப்பிடிப்பு... இயக்குநரைப் புகழ்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ்!

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஆபரேஷன் கங்கா படப்பிடிப்பு குறித்து கூறியிருப்பதாவது...

Bhagyashree forces with director, hero during Operation Ganga shoot

ஆபரேஷன் கங்கா படப்பிடிப்பில் இயக்குநர், நாயகனுடன் பாக்யஸ்ரீ போர்ஸ் - படங்கள்: இன்ஸ்டா / பாக்யஸ்ரீ போர்ஸ்

Updated On :

விஷ்ணு மோகன் இயக்கும் ’ஆபரேஷன் கங்கா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மோகன்லால் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழில் ’காந்தா’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் மலையாளத்தில் ‘ஆபரேஷன் கங்கா’ படத்தின் மூலமாக அறிமுகமாகவிருக்கிறார்.

ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பாக கோகுலம் கோபாலன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன் ராம்பால், ஆர். பார்த்திபன முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இது குறித்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆபரேஷன் கங்கா படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். விஷ்ணு மோகன் சார், உங்களது கருணை மிகப்பெரிய சூப்பர் பவர்! இயக்குநராக உங்களை மிகவும் வியக்கிறேன். இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக தேர்வு செய்ததுக்கு மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.

முன்னதாக மோகன்லாலுடன் நடிப்பது பற்றி, “ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் உங்களது கண்கள் வழியாக நான் சினிமாவைக் கற்றுக்கொள்கிறேன். நீங்கள் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவர்” எனக் கூறியிருந்தார்.

இந்திய அரசாங்கத்தினால் 2022ல் மீட்கப்பட்ட வெளிநாட்டு இந்தியர்களை மையமாக வைத்து ஆபரேஷன் கங்கா உருவாகி வருகிறது. பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்திலும் நடித்து வருகிறார்.

பாக்யஸ்ரீ போர்ஸ் பகிர்ந்த பதிவு

பாக்யஸ்ரீ போர்ஸ் பகிர்ந்த பதிவு - படம்: இன்ஸ்டா / பாக்யஸ்ரீ போர்ஸ்

Summary

Operation Ganga, starring Mohanlal, wraps first schedule, reveals Bhagyashri Borse

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.