
நடிகர் மம்மூட்டியின் புதிய திரைப்பட அப்டேட்!
நடிகர் மம்மூட்டியின் புதிய திரைப்படம் குறித்து...

நடிகர் மம்மூட்டி
நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்தும் வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான களம்காவல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றது.
பின், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த பேட்ரியாட் சுமாரான விமர்சனங்களையே பெற்றதால் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. தற்போது, மட்டஞ்சேரி மாஃபியா என்கிற திரைப்படத்திலும் தனுஷ் - 55 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மம்மூட்டி தயாரித்து நடித்துவரும் புதிய திரைப்படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு (செப். 7) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நிதேஷ் சகதேவ் இயக்குகிறார்.
An update has been released regarding the new film starring actor Mammootty.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






