
நடிகர் மோகன்லாலின் புதிய திரைப்படப் பெயர்!
மோகன்லால் - விஷ்ணு மோகன் திரைப்படப் பெயர்...

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 3 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. தற்போது, இதன் அடுத்த பாகத்தின் பணிகளிலும் இயக்குநர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதற்கிடையே, மோகன்லால் தன் மகள் விஸ்மயா நடித்த துடக்கம் என்ற படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்தாக, தான் நடிக்கவுள்ள திரைப்படங்களின் இயக்குநர்கள் என 7 பேரின் பெயரை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் இயக்குநர்கள் விஷ்ணு மோகன், பிரியதர்ஷன், திலீஷ் போதன், சத்யன் அந்திகாட், ஜூட் ஆண்டனி ஜோசப், ஜீத்து ஜோசப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ஆபரேஷன் கங்கா எனப் பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர்கள் அர்ஜுன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
The title poster of the new film starring actor Mohanlal has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







