
சர்தார் 2 பட கோன் வருவான் பாடலின் புரோமோ!
சர்தார் 2 திரைப்படத்தின் கோன் வருவான் பாடலின் புரோமோ விடியோ குறித்து...

கோன் வருவான் பாடலின் போஸ்டர். - படம்: எக்ஸ் / சோனி மியூசிக் சௌத்.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் கோன் வருவான் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள சர்தார் 2 திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகும் 100-வது திரைப்படம் என்பதால் இப்படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாம் சிஎஸ் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், கோன் வருவான் என்ற பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
ஆஷிகா ரங்கநாத் இந்தப் பாடலை பாடியுள்ளதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை படத்தில் அலெக்சாண்டர் ஜாய், சுபலாஷினி பாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Sardar 2 - Kon Varuvaan Promo Video Ft.Ashika
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






