காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரிஸ் 3..! யாரெல்லாம் நடித்துள்ளார்கள்?

பிரபலமான இணையத் தொடர் லஸ்ட் ஸ்டோரிஸின் மூன்றாவது பாகத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

Lust Stories 3 poster

லஸ்ட் ஸ்டோரிஸ் 3 போஸ்டர் - படம்: யூடியூப் / நெட்பிளிக்ஸ் இந்தியா.

Published On :5 செப்டம்பர் 2026, 3:16 pm IST

பிரபலமான இணையத் தொடர் லஸ்ட் ஸ்டோரிஸின் மூன்றாவது பாகத்தின் வெளியீட்டுத் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடக்கத்தில் 2018 ஜூனி 15ல் லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் குறும்படங்களின் தொகுப்பு வெளியானது. இதில் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் இயக்கிய நான்கு படங்களின் தொகுப்பு 120 நிமிஷங்கள் வெளியாகின.

இந்தத் தொடருக்குக் கிடைத்த அற்புதமான வரவேற்பினால் இதன் இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டு ஜூன் 29ல் வெளியானது. இதில் பால்கி, கொன்கனா சென் சர்மா, அமித் ரவீந்திரநாத் சர்மா, சிஜோய் கோஷ் இயக்கிய படங்கள் 132 நிமிஷங்களுடன் வெளியாகின.

இந்தத் தொடரில் தமன்னா, மிருணாள் தாக்குர் என நட்சத்திர பட்டாளங்கள் அடித்து முதல் பாகத்தைவிடவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில், இதன் மூன்றாம் பாகம் செப்.18ஆம் தேதி நெட்பிளிக்ஸ்இல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரமாதித்ய மோத்வானே, கிரண் ராவ், ஷகுன் பட்டர் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோர் இயக்கிய படங்களின் தொகுப்பு வெளியாகவிருக்கின்றன.

இந்தத் தொடரை ஆர்எஸ்விபி மற்றும் ஃபிளையிங் யுனிகார்ன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம், “லஸ்ட் ஸ்டோரிஸ் 3 காதல், காமம், உறவுகள், அடக்குமுறையில் இருக்கும் ஆசைகளை நடப்பு கண்ணோட்டத்துடன் தனிப்பட்ட முறையில் பிடிக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தொடரில் ராதிகா ஆப்தே, கொங்கோனா சென் சர்மா, அதிதி ராவ் ஹைதாரி, ராதிகா மதன், சனா தம்பி, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி, சித்தார்த், அலி ஃபசல் மற்றும் குர்பதே பிர்சாதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Radhika Apte, Konkona Sen Aditi Rao Hydari 'Lust Stories 3' to premiere on Netflix on September 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.