FOLLOW US

ON GOOGLE DISCOVER

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

கமலிடம் வாழ்த்து பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு..! விடியோ வெளியீடு!

பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவினர் நடிகர் கமலைச் சந்தித்து வாழ்த்து பெற்றது குறித்து...

The 'Bethlehem Family Unit' film crew received best wishes from Kamal.

கமலிடம் வாழ்த்து பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவினர். - படம்: இன்ஸ்டா / ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ்.

Published On :5 செப்டம்பர் 2026, 12:00 pm IST

நடிகர் நிவின் பாலி நடிகை மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றிக்கு அந்தப் படக்குழுவினர் நடிகர் கமலை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கிரீஷ் ஏடி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலித்து அசத்தியுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது தமிழிலும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே 200க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். தன்னை விட வயதில் அதிகமான நிவின் பாலியை காதலித்து திருமணம் செய்துகொள்வதுதான் கதையாக இருக்கிறது.

எளிமையாக கதையாக இருந்தாலும் அது எடுக்கப்பட்டிருக்கும் விதத்தினால் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் மமிதா, நிவின் பாலி உடன் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

முன்னதாக மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவையும் நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருந்தார். தற்போது பெத்லகேம் படக்குழுவையும் பாராட்டியுள்ளார். இதில் நாயகன், நாயகியைத் தவிர்த்து சில நடிகர்களுடன் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Summary

'Bethlehem Family Unit' film crew receives blessings from Kamal... Video released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.