
யோகலட்சுமியின் தி கோர்ட் இணையத் தொடர் வெளியானது!
ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான தி கோர் இணையத் தொடர்.

தி கோர்ட் இணையத் தொடர் - படம்: எக்ஸ்
ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை யோகலட்சுமி நடிக்கும் புதிய இணையத் தொடரான தி கோர்ட் இன்று(செப். 4) வெளியாகியுள்ளது.
ஹார்ட் பீட் தொடரின் முதல் இரண்டு பாகங்களில் தேஜு பாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை யோகலட்சுமி. இந்தத் தொடரில் தன்னுடைய துணிச்சலான மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களிடையே பிரபலமானார்.
இதன்மூலம், இவருக்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சிலம்பரசனின் அரசன் படத்திலும் யோகலட்சுமி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை யோகலட்சுமி, தி கோர்ட் என்ற இணையத் தொடரில் பிரதான பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் ஜெயபிரகாஷ், சஞ்சனா திவாரி, அர்ஜுன் ஷியாம், விவேக் பிரசன்னா, விஜே கல்யாணி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
திக்குவாய் குறைபாடுள்ள திறமையான வழக்குரைஞர்(யோகலட்சுமி), நீதிக்காகப் போராடுவதே இந்தத் தொடரின் கதை.
யோகலட்சுமி, தனது தந்தைக்கு எதிராகவே நீதிமன்றத்தில் வாதாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தந்தைக்கும் மகளுக்கும் நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி கோர்ட் இணையத் தொடர் இன்று(செப். 4) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோடுகள் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Court, a new web series starring actress Yogalakshmi who rose to fame with the web series Heart Beat was released today (September 4)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







