‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பிரகாஷ்ராஜின் ஜகமே சங்கீதம் டிரைலர்!

ஜகமே சங்கீதம் இணையத் தொடரின் டிரைலர் குறித்து...

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:03 pm IST

பிரகாஷ்ராஜின் ஜகமே சங்கீதம் இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஹிந்தி தொடரான பண்டிஸ் பண்டிட் என்ற தொடரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள புதிய இணையத் தொடர், ஜகமே சங்கீதம்.

இந்தத் தொடரின் கதை மற்றும் வசனங்களை வங்கலா சூர்ய மனோஜ், ஸ்ரவணி சமுத்ராலா மற்றும் ஏ.ஆர். பிரபவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்தத் தொடரில் மேகா ஸ்ரீகாந்த், மதுபாலா, அக்‌ஷய் லகுசானி, சுமன், பிரியங்கா நல்காரி, சிஜு மேனன், கேசவ் தீபக், ஜான்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலநாத் சூர்ய பிரதாப் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடரை சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார்.

கர்நாடக இசைக் குடும்பத்தின் பாரம்பரிய வாரிசான பாலு, தனது தாத்தா சாஸ்திரியின் (பிரகாஷ் ராஜ்) இசைப் பாரம்பரியத்தை எவ்வாறு பாதுக்காக்கிறார் என்பதே இந்தத் தொடரின் மையக்கரு.

பாரம்பரிய இசைக்கும் நவீன பாப் இசைக்கும் இடையே உள்ள மோதலையும், இசையின் வழியே குடும்ப உறவுகள் எவ்வாறு இணைகின்றன என்பதை மையப்படுத்தியும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

ஜகமே சங்கீதம் இணையத் தொடர் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

The trailer for Prakash Raj's web series 'Jagame Sangeetham' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.