தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ரிசார்ட் இணையத் தொடர் நிறைவு! ‘ஸ்டார் செஃப்’ ஆனாரா வெற்றி?

ரிசார்ட் இணையத் தொடர் நிறைவடைந்தது பற்றி...

resort

ரிசார்ட் இணையத் தொடர் - Instagram

Published On :

ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ரிசார்ட் இணையத் தொடரின் முதல் பாகம் இன்றுடன் நிறைவடைந்தது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் ரிசார்ட் இணையத் தொடர் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 4 எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது.

முறையாக சமையல்கலை கல்வி கற்காத நாயகன், சிறந்த செஃப் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள், போராட்டங்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டது.

'எருமை சாணி' புகழ் விஜய் குமார் எழுதி நாயகனாக நடித்து வருகிறார். இந்தத் தொடரின் எதிர்மறை பாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடிக்கிறார்.

விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இளைஞர்கள் மட்டுமின்றி, பலதரப்பட்ட மக்களும் இந்தத் தொடரை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், முறையாக சமையல்கலை கல்வி கற்காத நாயகன் வெற்றி, ’ஸ்டார் செஃப்’ போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதுடன் முதல் சீசன் நிறைவடைந்துள்ளது.

ஏற்கெனவே, ஹாட் ஸ்டாரின் நேரடி தயாரிப்பில் உருவாகி 10 கோடி மணிநேரம் பார்வைகளைக் கடந்த முதல் இணையத் தொடர் என்ற சாதனையை ரிசார்ட் படைத்திருந்தது.

இந்த நிலையில், நாயகன் வெற்றி தனது தந்தை சிதம்பரத்துடன் (கஞ்சா கருப்பு) இணைவாரா? என்ற கோணத்தில் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

'Resort' web series concludes! Did Vetri become a 'Star Chef'?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.