காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சர்தார் - 2 கண்டிப்பாக ஹிட் அடிக்கும்: சாம் சிஎஸ்

சர்தார் - 2 வெற்றி பெறும் என சாம் சிஸ் கூறியுள்ளார்...

நடிகர் கார்த்தி

Published On :5 செப்டம்பர் 2026, 2:08 pm IST

சர்தார் - 2 திரைப்படம் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ள சர்தார் 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டீசர் மற்றும் டிரைலர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் செப். 10 ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்குப் பலரும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளரான சாம் சிஎஸ் நேர்காணலில், “சர்தார் - 2 திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். மஹா அவதார் நரசிம்மாவுக்கும் நான் இதையே சொன்னேன். நடந்தது. அதேபோல், சர்தார் - 2க்கும் வெற்றி கிடைக்கும். காரணம், முதல் பாகம் தண்ணீரைப் பற்றி பேசியிருந்தது. இரண்டாம் பாகம் இன்னும் முக்கியமான விஷயத்தைப் பேசியிருக்கிறது. இப்படம் பார்க்கும் பலருக்கும் தங்கள் உடல் நலம் மீது கவனம் திரும்பும்” எனக் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸுக்கு இது 100-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Sam C.S. has stated that the movie Sardar 2 will definitely be a big hit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.