FOLLOW US

ON GOOGLE DISCOVER

சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

விஜய் - த்ரிஷா உறவு! பாஜக எம்.பி., கங்கனா காட்டம்

முதல்வர் ஜோசப் விஜய் - த்ரிஷா இடையிலான உறவு தொடர்பான விமர்சனங்கள் குறித்து கங்கனா ரணாவத் பேசியவை...

BJP MP Kangana Ranaut amid  Vijay-Trisha

கங்கனா ரணாவத் / நடிகை த்ரிஷா; உள்படம் - சுதந்திர நாள் விழாவில் முதல்வர் விஜய் - எக்ஸ்

Published On :8 செப்டம்பர் 2026, 8:49 pm IST

முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் த்ரிஷா இடையிலான உறவு குறித்த விமர்சனங்களுக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

ஆண் - பெண் என இருதரப்பிலும் சுமூகமான உறவு நீடித்துவந்தாலும், விமர்சிக்கப்படுவது என்னவோ பெண்ணாக மட்டுமே இருக்கிறார் என்றும், பெண்ணின் கண்ணியம் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிமாசலப் பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 8) நடைபெற்றது. இதன் பிறகு பெண்களுக்கு எதிரான சமூகத்தின் மனநிலை குறித்து கங்கனா ரணாவத் பேசியதாவது:

''தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். மதிப்புமிக்க நடிகருக்கும் நடிகைக்கும் இடையிலான உறவு குறித்து எழுந்த பிரச்னைகளை அறிந்திருப்பீர்கள். எப்படியும் அது ஒரு தனிப்பட்ட நபரின் கண்ணியத்தை சீர்குலைப்பதாகவே உள்ளது. அதில் பெண்தான் எப்போதும் முதலில் குறிவைக்கப்படுகிறாள்.

பெண்கள் மீதான இழிவான தாக்குதலுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இது தொடர்கிறது. ஒரு பெண் வேலைக்குச் சென்றாலோ, தலைமைப் பொறுப்பில் இருந்தாலோ, அதிகாரத்தில் இருந்தாலோ அல்லது வெற்றிகரமான பெண்ணாக இருந்தாலோ, எப்போதுமே அவளை வீழ்த்த அவளின் கண்ணியத்தின் மீது கல் எறிவதே முதல் தாக்குதலாக உள்ளது.

இதுபோன்று பெண்களை கொச்சைப்படுத்துவதை எப்போது நிறுத்தப்போகிறோம்? ஒரு சமூகமாக நாம் நம்மையே சுயபரிசோதனை செய்துகொண்டு, ஒரு பெண்ணை எப்படிப் பார்க்கிறோம்? என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். அவர்களை உண்மையில் மரியாதையுடன் பார்க்கிறோமா? இல்லையா? என்று கேட்டுக்கொள்ள வேண்டும்'' என கங்கனா பேசினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற காவேரி நீருக்கான போராட்டத்தில் உதயநிதி பேசும்போது, முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியதாக ஒரு விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. உதயநிதியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும் எழுந்தன. இதற்காக அவரை தமிழக அரசு கைது செய்து, பின்னர் விடுவித்தது.

எனினும் இந்த விடியோ எடிட் செய்யப்பட்டது என்றும், தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Summary

BJP MP Kangana Ranaut amid Vijay-Trisha relationship

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.