FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கார்த்தி, சூரி... யாருக்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன?

சர்தார் - 2, மண்டாடி திரை எண்ணிக்கைகள் குறித்து...

நடிகர்கள் கார்த்தி, சூரி

Published On :8 செப்டம்பர் 2026, 5:47 pm IST

மண்டாடி, சர்தார் - 2 திரைப்படங்களை வெளியிடும் திரையரங்கங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் மண்டாடி. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வியலில் ஒன்றாக படகுப்போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் காட்சிகள் பெரிதாக வரவேற்பைப் பெற்றதால் பலரும் செப். 10 ஆம் தேதி முதல் நாள் முதல் காட்சியாக மண்டாடியைப் பார்க்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அதே நாளில் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படமும் திரைக்கு வருகிறது. இரண்டு படங்களுக்குமே ஆரோக்கியமான எதிர்பார்ப்பு நிலவுதால் யாருக்கு அதிக திரைகள் கிடைக்கும் என்கிற கேள்வி இருந்தது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் சர்தார் - 2 திரைப்படத்திற்கு அதிக திரைகள் ஒதுக்கப்பட்டாலும் திரையரங்க எண்ணிக்கையில் மண்டாடியே முன்னிலையில் உள்ளது. மேலும், மதுரையில் மண்டாடிக்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர் பகுதிகளில் இரு திரைப்படத்திற்கும் இதுவரை இணையான திரைகளே ஆன்லைனில் காட்டுகின்றன. முன்பதிவு தளங்களில் இல்லாத திரையரங்களிலும் இதே நிலவரமே இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், பல பகுதிகளிலும் அகலத் திரைகளில் மண்டாடிக்கே காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடலோர மாவட்டங்களிலும் மண்டாடியைக் காண ஆர்வம் இருக்கும் என்பதால் அப்பகுதிகளில் இப்படத்திற்கு கூடுதலாகத் திரைகள் வழங்கப்படலாம். அதே நேரம், நடிகர் கார்த்திக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் சர்தார் - 2 ஹைதராபாத்தில் அதிக திரைகளில் வெளியாகிறது. மண்டாடியில் பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடித்திருந்தாலும் திரை எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

மிகப்பெரிய பொருள்செலவில் நடிகர்கள் கார்த்தி, எஸ்ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் என நடிகர்கள் பட்டாளே சர்தார் - 2 திரைப்படத்தில் இருந்தாலும் மண்டாடி சவலாகவே அமைந்துள்ளது. இது, நடிகர் சூரிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. இரண்டு திரைப்படங்களில் வெற்றி பெறும் திரைப்படத்துக்கு அடுத்தடுத்த நாள்களில் திரைகள் அதிகரிக்கும் என்பதால் ரசிகர்களிடமும் எந்தப்படம் பிளாக்பஸ்டர் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்தார் - 2, மண்டாடி திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களது படங்கள் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Information has been released regarding the theaters screening the films Mandadi and Sardar 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.