FOLLOW US

ON GOOGLE DISCOVER

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

என் குடும்பத்துக்கு நன்றி: ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் பேச்சு கவனம் பெற்றுள்ளது...

ஜேசன் சஞ்சய்

Published On :9 செப்டம்பர் 2026, 11:16 am IST

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ள பேச்சு கவனம் பெற்றுள்ளது.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது, ஜேசனின் முதல் திரைப்படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட பேசிய ஜேசன் சஞ்சய், “இயக்குநர் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அம்மாவிடம் சொன்னேன். சிட்டி ஆஃப் காட் (city of god) திரைப்படம் பார்த்த பின்புதான் நானும் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. வாழ்க்கையில் நம் அனைவருக்கும் சிக்மா தருணம் இருந்திருக்கும். நாம் எடுத்த சிறிய முடிவால் வாழ்க்கையில் பெரிய மாற்றமே ஏற்பட்டிருக்கும். அப்படியொரு சாதாரண மனிதன் வாழ்க்கையில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. உங்களால் இக்கதையுடன் தொடர்புபடுத்த முடியும்.

இயக்குநராக ஆசைப்படுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது; நிறைய குறும்படங்களை எடுங்கள், எழுத ஆரம்பிப்பது முக்கியமானது. திரைப்படம் எடுக்க பொறுமையையும் கற்றுக்கொள்ளுங்கள். காலையில் இந்தக் காட்சியை எடுக்கலாம் என படப்பிடிப்புக்குச் செல்வோம். ஆனால், அங்கு நாம் எதிர்பார்த்த மாதிரி நடக்காது. நிறைய தடங்கல்கள் வரும். அதையெல்லாம் கடந்து நாம் நினைப்பதை எடுக்கவும் பழக வேண்டும். சிக்மா திரைப்படத்திற்காக என் குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

Director Jason Sanjay's speech, in which he thanked his family, has garnered attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.