நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (செப். 11 - 17)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

This week Ott

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்

Published On :

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

Listicle image

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(செப். 11) வெளியாகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகாவும் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

2மகுடம்

Listicle image

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள திரைப்படம் மகுடம். நாயகிகளாக துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3பஞ்சநாமா

Listicle image

மோகன் ஸ்ரீவத்ஸா இயக்கத்தில் நடிகர்கள் பரத், மேதா ரெட்டி, சிவாஜி ராஜா, சரண் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகும், குற்ற விசாரணை த்ரில்லர் இணையத் தொடர் பஞ்சநாமா.

இந்த இணையத் தொடர் நாளை ஜீ5 தளத்தில் 6 எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகவுள்ளது.

4மேஜிக் மஷ்ரூம்ஸ்

Listicle image

நாதிர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மேஜிக் மஷ்ரூம்ஸ்.

விசித்திரமான காளான்களால் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

5வரவு

Listicle image

ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் வெளியான அதிரடித் திரைப்படம் வரவு. இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், தீபக் பரம்போல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது

6வெஞ்சன்ஸ்

Listicle image

ராகுல் அசோக் இயக்கத்தில், நடிகை அபர்ணதி பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வெஞ்சன்ஸ்.

மேலும் இந்தப் படத்தில் இளவரசு, லிவிங்ஸ்டன், காளி வெங்கட், ஒய். ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.

7பிரின்ஸ் ஆப் மோலிவுட்

Listicle image

மலையாள இயக்குநர் ஷானி காதர் இயக்கத்தில், டெய்ன் டேவிஸ், நிர்மல் பாலாஜி, ஹரிஷ்மா, வித்யா விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள இணைத் தொடர் பிரின்ஸ் ஆப் மோலிவுட்.

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், நாளை (செப்.11ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகயிருக்கிறது.

8கடந்த வார ஓடிடி (டிசி)

Listicle image

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வெளியான படம் டிசி.

இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

9ஜிடிஎன்

Listicle image

புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்க, இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

10உன்மத்தம்

Listicle image

கிரண் தாஸ் இயக்கத்தில், குஞ்சாக்கோ போபன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியான மலையாள கிரைம் த்ரில்லர் திரைப்படம் உன்மத்தம்.

இந்தத் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் காணக் கிடைக்கிறது.

11அனந்தன் காடு

Listicle image

அனந்தன் காடு திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

நடிகர் ஆர்யாவுடன் முரளி கோபி, நிகிலா விமல், இந்திரன், சுனில், ரெஜினா, தேவ் மோகன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

12அருள்வான்

Listicle image

அருள்நிதியின் அருள்வான் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில், நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Summary

Arulnithi's film Arulvaaan has been released on an OTT platform today (Sept. 11)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.