கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐடிடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2! புதிய பாடல் புரோமோ!

ஜெயிலர் 2 திரைப்படத்தின் 2 ஆவது பாடலின் புரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது...

jailer 2

ஜெயிலர் - 2 படத்தின் புதிய பாடல் புரோமோ...

Published On :

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் 2 ஆவது பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “ஜெயிலர்”. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மீண்டும் இணைந்துள்ள இக்கூட்டணியில் “ஜெயிலர் 2” படம் உருவாகி வருகிறது. நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து தங்களின் பாணியில் நகைச்சுவையாக ஜெயிலர் 2 படத்தின் “ஒன் சன், ஒன் மூன்” எனும் 2 ஆவது பாடலின் புரோமோ விடியோவை இன்று (செப். 23) மாலை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் வரும் செப். 25 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The promo video for the second song from the movie "Jailer 2," starring Superstar Rajinikanth, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.