திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

அப்பாவை இயக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இதைச் செய்திருப்பேன்: ஜேசன் விஜய்

ஜேசன் விஜய் தன் தந்தை முதல்வர் விஜய் குறித்து பேசியுள்ளார்....

jason sanjay with cm vijay

முதல்வர் விஜய், இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

Published On :

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் தந்தையான முதல்வர் விஜய்யை நடிக்க வைக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வேன் என்பதைம் கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் வருகிற அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், நாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய்யிடம், “ஒருவேளை உங்கள் அப்பாவை (முதல்வர் விஜய்) இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அவரை வைத்து என்ன செய்வீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ஜேசன், “அவரின் நகைச்சுவை உணர்வை வைத்துதான் எடுப்பேன். அவரிடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற விஷயம் அதுதான். அருகே இருந்து பார்த்தவரை அவரிடம் அலாதியான நகைச்சுவை உணர்வு உண்டு. எப்போதும் அவருக்குள் ஒரு குழந்தைதனம் இருக்கும். அவரை நடிக்க வைக்க வாய்ப்பு கிடைத்தால் அவரின் ஜாலியான பக்கத்தைத்தான் எடுக்க நினைப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தன் திரைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் நேர்மைறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு என் தனி அடையாளத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் ஜேசன் கூறியுள்ளார்.

Director Jason Sanjay has spoken about what he would do if he got the opportunity to cast his father, Chief Minister Vijay, in a film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.