யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

முதல்வராக இருக்கும் எனது தந்தைக்கு நன்றி: ஜேசன் சஞ்சய்

சிக்மா படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசியது குறித்து...

Vijay and Jason Sanjay

முதல்வர் விஜய், ஜேசன் சஞ்சய் - படங்கள்: சிஎம்ஓதமிழ்நாடு, லைகா புரடக்‌ஷன்ஸ்

Published On :

சிக்மா படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய், “முதல்வராக இருக்கும் எனது தந்தைக்கு நன்றி” எனக் கூறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் அக்.2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடும் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேற்று இரவு நடந்த சிக்மா படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசியிருப்பதாவது:

நாம் அனைவரது வாழ்க்கையிலும் சிக்மா தருணம் இருக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் பலருக்கும் பலவிதமான தேவைகள் இருக்கின்றன. அப்போது அவர்கள் எடுத்த ஒரு முடிவினால் அவர்களது வாழ்க்கையே மாறும். அப்படிப்பட்ட பயணம்தான் சிக்மா.

முதல் படம் என்பதால் இது எனக்கு சிறப்பானதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கிறது. 22 வயதில் எனது கதையை நம்பியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி.

எனது அம்மாவுக்கு நன்றி. எனது அப்பா... இப்போது முதல்வராக இருக்கிறார். அவருக்கும் நன்றி. எனது இனிமையான சகோதரிக்கும் நன்றி என்றார். மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Summary

Thanks to my father, who is the Chief Minister: Jason Sanjay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.