யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

சாய் அபயங்கர் கடவுளின் குழந்தை... இயக்குநர் அட்லீ புகழாரம்!

பத்தா படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் குறித்து அட்லீ பேசியிருப்பதாவது...

Sai Abhyankkar, atlee

சாய் அபயங்கர், அட்லீ - படங்கள்: யூடியூப் / திங்க் மியூசிக்

Published On :

பத்தா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ, “இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கடவுளின் குழந்தை” எனப் பேசியுள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ’பத்தா’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் அட்லி தயாரித்துள்ள பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 1980-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் சாய் இசையில் சமீபத்தில் வெளியான மகளே எனும் பாடல் மிகவும் வரவேற்பைப் பெற்றது. சமகாலத்தில் இளம் வயதில் பலரையும் கவர்ந்துள்ளார்.

சாய் அபயங்கர் குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான அட்லீ பேசியிருப்பதாவது:

சாய் அபயங்கர் கட்சி சேர பாடல் வரும்போதே எனக்குத் தெரியும். அப்போது சிறிய பையன். ஒருமுறை வீட்டுக்கு வர அழைத்து பேசியிருக்கிறேன். அப்போது அவர் என்னிடம் ‘அண்ணா நான் தினமும் ஒரு ட்யூன் போட்டு அதனைப் பாடலை இசையமைத்து தற்போது என்னிடம் 500 பாடல்கள் இருக்கிறது அண்ணா’ என்றார்.

நான் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்களுடன் வேலைப் பார்த்துள்ளேன். ராக்கா படத்துக்கு யாருடன் போவது என்று சிந்தித்துக்கொண்டே இருக்கும்போது சாய் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு எனது தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்தார்.

அதிகாரபூர்வமற்றதாக இருந்தாலும் ராக்கா படம்தான் சாய் அபயங்கரின் முதல் படம். நான் கண்ட கனவெல்லாம் நிறைவேறி இருக்கிறது. இயக்குநரிடம் இது குறித்து பேசினேன். அதற்கு அவர் சின்ன பையன் எனக் கூறினார். சாய் சின்ன பையன் அல்ல; கெட்ட ராஸ்கல். செல்லமே மகளே பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போது எனது மகள் என் கண்ணுக்குள் வருகிறாள்.

சாய் அபயங்கர் கடவுளின் குழந்தை. இந்தப் பணிவை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இளையராஜா - ரஹ்மான் - யுவன் - அனிருத் எப்படி ஒரு காலகட்டத்தை ஞாபகப்படுத்துவதுபோல சாய் அபயங்கரும் ஒரு காலகட்டத்தை ஞாபகப்படுத்தில் பதிய வைப்பார் என்றார்.

Summary

Sai Abhyankkar is a child of God... Director Atlee heaps praise!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.