யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

அரசியலில் அடுத்த தலைமுறை வலுவாக இருக்கும்; காரணம் விஜய்: அட்லீ

விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ பேசியிருப்பதாவது...

Producer atlee

தயாரிப்பாளர் அட்லீ - படம்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா

Published On :

விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ, “அரசியலில் அடுத்த தலைமுறை வலுவாக இருக்கும்; காரணம் விஜய் அண்ணாவாகத்தான் இருப்பார்” எனப் பேசியுள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ’பத்தா’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் அட்லி தயாரித்துள்ள பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 1980-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகியுள்ளது.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது தலைமைப் பண்பு குறித்தான பேச்சு முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகப் பலரும் சமூக வலைதளத்தில் பேசினார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதன் தயாரிப்பாளரான அட்லீ பேசியது விஜய் சேதுபதிக்கு பதிலடி தரும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் பேசியிருப்பதாவது:

அரசியலில் அடுத்த தலைமுறையினர் வலுவாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணன். நான் அரசியல்வாதியும் அல்ல; நான் அரசியல் பேசுவதும் இல்லை. என் முந்தைய தலைமுறையையும் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது 5 வயது குழந்தைகளும் சட்டப்பேரவையை நேரலையில் காலையில் பார்க்கிறார்கள்.

வலுவான தலைமுறையினரை விஜய் அண்ணா உருவாக்கியுள்ளார். அதில் சந்தேகமே கிடையாது. அரசியல் எல்லாம் நல்லதல்ல; சரிவாராது என்றெல்லாம் முன்பு சொல்வார்கள். ஆனால், அது மாறியிருக்கிறது. அரசியல் நமக்கானது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது மூளையைப் பொருத்தது. யாரும் நம்மை பாதிக்க முடியாது என்றார்.

Summary

Next Generation will be solid in politics.. The Only reason is Vijay anna says Atlee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.