
ஜிகுஜிக்கான்... விஜய் சேதுபதி நடிக்கும் பத்தா படத்தின் பாடல் வெளியீடு!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி படங்களின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் ’பத்தா’. இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் அட்லி தயாரித்துள்ள பத்தா படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
1980-களில் நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து வெளியான ‘மகளே’ பாடலும் கவனம் பெற்றது.
இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இதில், விஜய் சேதுபதியின் தோற்றமும் அவரது கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலாக ’ஜிகுஜிக்கான்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல், டீசரில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Vijay Sethupathi's Patha movie song release
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








