மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இன்னா புள்ள படமா... கோலிவுட்டில் அறிமுகமாகும் இன்ஸ்டா புகழ் பாலமுருகன்!

விஜய் சேதுபதியின் பத்தா படத்தில் அறிமுகமாகும் இன்ஸ்டா புகழ் பாலமுருகன் குறித்து...

News image

பத்தா பட போஸ்டர், பாலமுருகன். - படங்கள்: இன்ஸ்டா / விஜய் சேதுபதி, பாலமுருகன்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 9:44 pm IST

விஜய் சேதுபதியின் பத்தா படத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் புகழ் பெற்ற பாலமுருகன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இவரும் மல்லேஷ் கண்ணனும் இணைந்து நகைச்சுவை விடியோக்களை பதிவிட்டு கவனம் பெற்றார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பான் இந்திய அளவிலும் கவனம் பெற்று வருகிறார்.

இறுதியாக இவர் நடித்த மகாராஜா, தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகின. தற்போது, இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் பத்தா எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் அக். 1 ஆம் தேதி வெளியாகும் என்பதையும் படத்தின் தயாரிப்பாளர் அட்லி தெரிவித்துள்ளார்.

சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படம் 1960-களில் நடந்த கதையாக எழுதப்பட்டுள்ளது. இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இருந்து பலரும் திரைத்துறை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படித்தான் மலையாளத்தில் வாழ 2 படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி இவர்களது விடியோக்களை பார்த்து பாராட்டி இருந்தார். தற்போது, அவருடனே நடித்தும் அசத்தியுள்ளார். ‘இன்னா புள்ள சௌக்கியமா..’ என்ற விடியோவில் பாலமுருகன் தமிழகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்றார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மிகப்பெரிய திரையில் எனது முதல் அறிமுகம். எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு இதயப்பூர்வமான நன்றிகள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சிறப்பான நன்றி. மக்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் பலரும், “இன்னா புள்ள படமா...” என அவரது பாணியிலேயே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Summary

Instagram fame Balamurugan makes his debut in the movie 'Paththa'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.