FOLLOW US

ON GOOGLE DISCOVER

மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் முதல்வர் விஜய் அவருக்கு மரியாதை......

News image

முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)

Updated On :3 ஆகஸ்ட் 2026, 10:28 am IST

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Summary

May the fame of freedom fighter Dheeran Chinnamalai endure forever,stated Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.